குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவில் ஜூன் 1ம் தேதி கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20மார் 2023 05:03
மேட்டுப்பாளையம்: குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவில் கும்பாபிஷேகம், ஜூன் மாதம் முதல் தேதி நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
காரமடை அருகே குருந்தமலையில், மிகவும் பிரசித்தி பெற்ற, குழந்தை வேலாயுத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த, 2012ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகம் நடந்து, 11 ஆண்டுகள் ஆனதால், தற்போது கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். தேரை சீரமைத்து, வரும் ஆண்டில் தேரோட்டம் நடத்த வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இது சம்பந்தமாக குருந்தமலை கோவிலில், ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கோவில் செயல் அலுவலர் லோகநாதன் தலைமை வகித்தார். முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் லட்சுமி நாராயணசாமி உட்பட பல நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆலோசனைக் கூட்டத்தில், வரும் ஜூன் மாதம் ஒன்றாம் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. தற்போதுள்ள தேரை மராமத்து பணிகள் செய்ய, தோலம்பாளையம் அருகே பணப்பாளையம் புதூரில் உள்ள இலுப்பை மரத்தை தேர்வு செய்தனர். கோவிலின் மேற்கு பகுதியில் பக்தர்களின் வசதிக்காக புதிதாக படிக்கட்டுகள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.