பதிவு செய்த நாள்
21
மார்
2023
10:03
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பிளிச்சி ஊராட்சி ஒன்னிபாளையம் ராஜமாரியம்மன், வனபத்திரகாளியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா இம்மாதம், 24ம் தேதி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இம்மாதம், 22ம் தேதி காலை, 9:00 மணிக்கு மங்கல இசை, விநாயகர் வழிபாடு, நவகிரக கலச பூஜை, தன பூஜை, தீபாராதனை நடக்கிறது. மதியம், 2:00 மணிக்கு ஒன்னிபாளையம் செல்வ விநாயகர் திருக்கோவிலில் இருந்து முளைப்பாலிகை ஊர்வலம், விமான கோபுர கலசம், தீர்த்த குடம் கொண்டு வருதல் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மாலை, 5:00 மணிக்கு முதல் கால யாக பூஜை துவங்குகிறது. இரவு, 8:00 மணிக்கு தீபாராதனை பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, 23ம் தேதி காலை இரண்டாம் கால யாக பூஜை பகல், 11:00 மணிக்கு ராஜமாரியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு யந்தர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடக்கிறது. மதியம், 12:00 மணிக்கு இரண்டாம் கால ஹோமங்கள், பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை, 5:00 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை துவங்குகிறது. இரவு, 8:00 மணிக்கு பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.
இம்மாதம், 24ம் தேதி காலை, 4:30 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, தொடர்ந்து நாடி சந்தானம், யாத்ரா தானம், புண்ணிய குடங்கள் புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. காலை, 6:00 மணிக்கு மூலவர் விமானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை, 8:00 மணிக்கு மகா அபிஷேகம், தச தரிசனம், மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடக்கிறது. காலை, 8:30 மணிக்கு மேல் அன்னதானம் இரவு, 7:00 மணிக்கு மேல் கலை நிகழ்ச்சி நடக்கிறது. விழாவை தொடர்ந்து, 12 நாட்கள் மண்டல பூஜை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் கமிட்டியார் ஒன்னிபாளையம், ஒன்னிபாளையம் புதூர், கரிச்சிபாளையம் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.