குருவாயூர் கோவில் தரிசனம் செய்த ஆஸ்கர் விருது குறும்பட நட்சத்திரங்கள் பொம்மனும் பெல்லியும்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21மார் 2023 10:03
பாலக்காடு: சிறந்த ஆவணப்படம்-குறும்படத்திற்க்கான ஆஸ்கர் விருது பெற்ற "எலிபன்ட் விஸ்பரேழ்சி"ன் நட்சத்திர தம்பதிகள் குருவாயூர் கோவில் தரிசனம் செய்தனர்.
தம்பதியர் வளர்த்த இரண்டு குட்டி யானைகளின் அன்பு வாழ்க்கை கதை சொல்லும் குறும்படம் "எலிபன்ட் விஸ்பரேழ்ஸ்". இதில் தம்பதியராக நடித்தவர்கள் முதுமலை தெப்பக்காடு யானைகள் சரணாலயத்தில் பயிற்சியாளர்களான பொம்பனும் அவரது மனைவியும் பெல்லியும். இவர்கள் நேற்று ஸ்ரீ குருவாயூர் கிருஷ்ணரை தரிசித்து அருள் பெற வந்துள்ளனர். பேரக்குழந்தை சஞ்சுகுமாருடன் நேற்று மாலை 4.30 மணியளவில் தேவஸ்தான அலுவலகத்தில் எட்டிய பொம்மனையும் பெல்லியேயும் தேவஸ்தான நிர்வாகத்தினர் வரவேற்றனர். விருது பெற்றதில் இருவரேயும் பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தன நிர்வாகி வினயன். நிர்வாகிகளான ராதாகிருஷ்ணன், மாயாதேவி, தேவஸ்தான ஊழியர்கள் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்குப் பிறகு இருவரும் கோவில் தரிசனம் நடத்தினர்.
கோவில் தரிசனம் முடித்து பொம்மன் கூறியதாவது: குருவாயூர் கிருஷ்ணர் பக்தர்களான நாங்கள் எல்லா ஆண்டும் குருவாயூர் வருவது வழக்கம். தங்களின் கதையும் நடிப்பும் பங்கு வைத்த படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைத்ததில் மகிழ்ச்சி கொள்கிறோம். அதற்கு கிருஷ்ணரிடம் மனதார நன்றியுள்ளனர். கடமைப்பட்டிருக்கிறோம். அதை தெரிவிக்க கடவுளின் சன்னதி தேடி வந்துள்ளோம்.