பதிவு செய்த நாள்
17
செப்
2012
11:09
காஞ்சிபுரம்: விநாயகர் சதுர்த்தியையொட்டி, விநாயகர் சிலை அமைப்போர், 20 பேர் கொண்ட குழு அமைத்து, சிலையை பாதுகாக்க வேண்டும் என, காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் தெரிவித்தார்.விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு ஆலோசனை கூட்டம், காஞ்சிபுரத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் தலைமையில் நடந்தது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், உமையாள், காவல் துணை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், விநாயகர் சிலை அமைப்போர் கலந்து கொண்டனர். விநாயகர் சிலை அமைப்போர், பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்:*ஐந்து பேர் குழுவினர் நியமித்து, சிலையை எந்நேரமும் பாதுகாக்க வேண்டும்.*விநாயகர் சிலை வைக்கும் இடம், ஊர்வல தேதியை, முன்னதாக தெரிவிக்க வேண்டும்.*பூஜை செய்யும் அர்ச்சகரின் விவரங்களை தெரிவிக்க வேண்டும்.*காவல் துறை ஒதுக்கிய பாதையில் ஊர்வலம் செல்ல வேண்டும்.*அன்னியர்கள் நடமாட்டம் குறித்து உடனே தகவல் தெரிவிக்க வேண்டும்.*கூம்பு ஒலிப்பெருக்கி அமைக்கக் கூடாது.*தென்னங்கீற்றில் மேற்கூரை அமைக்கக் கூடாது.