திட்டக்குடி: திட்டக்குடி முக்களத்தி அம்மன் கோவில் தேர்திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர்.
திட்டக்குடி மேலவீதியில் எல்லை தெய்வமான முக்களத்தி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா, மார்ச்.14ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மார்ச்.21ம் தேதி, எட்டாம்நாள் திருவிழாவில் பெண்கள், ஊரணி பொங்கலிட்டு சிறப்புவழிபாடு செய்தனர். ஒன்பதாம் நாள் திருவிழாவான நேற்று முக்களத்திஅம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். மாலை 6.30மணிக்கு பரம்பரை தர்மகர்த்தாக்கள், கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் வடம்பிடித்து தேர்இழுத்தனர். தேரோடும் வீதிகள் வழியாக, முக்களத்திஅம்மன் தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தேர்திருவிழாவில் பங்கேற்றனர்.