பதிவு செய்த நாள்
23
மார்
2023
12:03
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் தென்திருப்பதி கோவிலில், பண்டிகையை முன்னிட்டு மலையப்ப சுவாமி தங்க தேரில் வந்தார்.
மேட்டுப்பாளையம் அடுத்த, சிறுமுகை அருகே ஜடையம்பாளையம் ஊராட்சியில், தென் திருப்பதியில் வேங்கடேஸ்வர வாரி கோவில் உள்ளது. இக்கோவிலில் யுகாதி பண்டிகையை முன்னிட்டு, நேற்று காலை நடை திறந்து, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மாலையில் சிறப்பு அலங்காரத்தில், மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன், அலங்காரம் செய்த தங்கத்தேரில் எழுந்தருளினார். அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க, தங்கத் தேரோட்டம் நடந்தது. இந்த வைபவத்தில் பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு, தங்க தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். நான்கு ரத வீதிகளில் உலா வந்து, தேர் நிலையை அடைந்தது. இந்த தேரோட்டத்தில், கே.ஜி., நிறுவனங்களின் தலைவர் பாலகிருஷ்ணன், அன்னூர் கோவிந்தசாமி நாயுடு குடும்பத்தினர், கே.ஜி. தொழில் நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.