திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பங்குனி தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மார் 2023 11:03
திருச்சி : பங்குனி திருவிழாவை முன்னிட்டு, திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் முக்கிய விழாவான தேரோட்டம் நடந்தது.
பஞ்ச பூதங்களில் நீர்த்தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் பங்குனி தேரோட்டத்திற்கான எட்டுத்திக்கு கொடியேற்றம் கடந்த 18ம் தேதி நடைபெற்றது. விழாவில் தினமும் காலை மாலை சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (23ம்தேதி) காலை நடைபெற்றது. அதிகாலை சுவாமி, அம்மனுக்கு உற்சவர் மண்டபத்தில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று, அதிகாலை 3.45 மணிக்குள் உற்சவர்கள் ஜம்புகேஸ்வரர் பெரிய தேரிலும், அகிலாண்டேஸ்வரி அம்மன் மற்றொரு தேரிலும் எழுந்தருளினர். தொடர்ந்து, தேரோட்டம் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடி்த்தனர்.