பதிவு செய்த நாள்
23
மார்
2023
05:03
பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கல்ப்பாத்தி வேட்டைக்கொருமகன் கோவில் சுற்றம்பலதகவில் செதுக்கப்பட்ட தர்மசாஸ்தாவின் ஆறு திருவடிவங்கள் பக்தர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது.
இக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் ஏப்ரல் மாதம் 25ம் தேதி நடக்கவுள்ளனர். இத்தையொட்டி கோவில் புனரமைப்பு பணிகள் வெகு சிறப்பாக நடந்து முடிந்துள்ளன. மகா கும்பாபிஷேகத்தை முன்னிடடு கோவில் வளாகத்தில் ஈரோடு பாலாஜி பாகவதரின் ஒரு வாரம் நீண்டு நின்ற பாகவத சப்தாஹம் கடந்த தினம் நடந்து முடிந்தன. இதில் ஏராள பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்தநிலையில் கோவில் புனரமைப்பு பணிகளையொட்டி மாற்றியமைத்த தர்மசாஸ்தாவின் மாறுபட்ட திருவடிவங்கள் கொண்ட சுற்றம்பலகதவு பக்தர்கள் கவர்ந்துள்ளனர். முழுமையாக தேக்கு தடியில் செய்த கதவில் தர்ம சாஸ்தாவின் ஆறு அறிய திருவடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. பூர்ண புஷ்கல சமேத வாழும் ஆரியங்காவு தர்மசாஸ்தா, குளத்துப்புழை பால சாஸ்தா, எருமேலி தர்மசாஸ்தா, சபரிமலை தர்மசாஸ்தா, குதிரான் அஸ்வாரூட சாஸ்தா ஆகிய திருவடிவங்களை செதுக்கப்பட்டுள்ளன. தர்ம சாஸ்தாவின் ஆறு திருவடிவங்கள் ஒரே கதவில் வருவது முதல் முறையாகும். இதை தத்துரூபமாக செதுக்கிய சிற்பி திருச்சூர் கடங்கோடை சேர்ந்த பிரஜோத் சுப்ரமணியனாகும். 40 நாட்கள் கொண்டு பணிகளைப் பூர்த்தி செய்த இவர், 20 ஆண்டுகளாக இத்துறையில் கேரளாவிலும் வெளி மாநிலங்களில் தனக்கென ஒரு அடையாளத்தை பதித்தவர். சுனில், விஜீஷ், ரஜீஷ், ராஜேஷ், ரகு ஆகியோர் இவருக்கு உதவுகின்றன.