அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோயில் தேர் வெள்ளோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மார் 2023 09:03
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் கோயில் திருவிழா வருவதை ஒட்டி தேர் வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா வரும் 28 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு தேர் வெள்ளோட்டம் நேற்று காலை நடந்தது. பேருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு புனித நீர் ஊற்றப்பட்டது. மேள வாத்தியங்கள் முழங்க, முத்து மாரியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு, பஜார் பகுதி வழியாக வந்து மீண்டும் கோயிலை அடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை நாடார் உறவின்முறை தலைவர் காமராஜன், கோவில் டிரஸ்ட் ராஜரத்தினம் செய்தனர்.