வீரகாளியம்மன் கோயிலில் சுவாமி சிலை எடுப்பு திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மார் 2023 09:03
மேலுார்: தும்பைபட்டி வீரகாளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மழை பெய்து எல்லா வளமும் கிடைக்க வேண்டி நேற்று து.அம்பலகாரன்பட்டியில் இருந்து வீரகாளியம்மன், மந்தை கருப்பண சுவாமி சிலைகள் மற்றும் நேர்த்திக்கடன் பதுமைகளை பக்தர்கள் சுமந்து கோயிலுக்கு கொண்டு சென்றனர். அதனை தொடர்ந்து கோயிலில் மாவிளக்கு வைத்தும், கிடா வெட்டி பொங்கல் வைத்தனர். இத் திருவிழாவில் தும்பைபட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.