தயாபுரம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பால்குடம் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மார் 2023 10:03
மானாமதுரை: மானாமதுரை தயாபுரம் முத்து மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வைகை ஆற்றிலிருந்து பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து பூக்குழி இறங்கி அம்மனை வழிபட்டனர். இந்தாண்டிற்கான விழா மார்ச் 15ம் தேதிகாப்பு கட்டுதலுடன் துவங்கியதையடுத்து ஏராளமான பக்தர்கள் விரதத்தை துவங்கினர். நேற்று பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வைகை ஆற்றிலிருந்து தீச்சட்டி, பால்குடங்கள், ஆயிரங்கண் பானை பூ கரகம், எடுத்து நகரின் முக்கிய வீதிகளின் வழியே ஊர்வலமாக வலம் வந்து கோயில் முன்பாக பூக்குழி இறங்கி அம்மனை வழிபட்டனர். கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏற்பாடுகளை கோயில் டிரஸ்டிகள் சுப்பிரமணியன், நாகராஜன், முருகன் செய்திருந்தனர். டி.எஸ்.பி.,கண்ணன், இன்ஸ்பெக்டர் முத்துகனேஷ், சிப்காட் எஸ்.ஐ., சுரே ஷ் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.