வடக்குபுற காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26மார் 2023 03:03
கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி வடக்குபுற காளியம்மன் கோயில் பங்குனி மாத திருவிழாவை முன்னிட்டு நேற்று பொய் செல்லா மெய் அய்யணார் கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்தும், தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் காவடி எடுத்து 4 கி.மீ., தொலைவில் உள்ள காளியம்மன் கோயிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அதனைத் தொடர்ந்து கொட்டாம்பட்டி முக்கிய வீதிகள் வழியாக பூ தட்டு ஊர்வலம் நடைபெற்றது. இத் திருவிழாவில் கொட்டாம்பட்டி, வலைசேரிபட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.