பாடிபள்ளம் பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மார் 2023 03:03
செஞ்சி: பாடிப்பள்ளம் பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
செஞ்சி ஒன்றியம் பாலபள்ளம் பாலமுருகன் கோவிலில் 8 ம் ஆண்டு பங்குனி உத்திர தீமிதி, தேர்திரு விழா வரும் ஏப். 5ம் தேதி நடக்க உள்ளது. இதை முன்னிட்டு நேற்று காலை 8 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகமும் 9 மணிக்கு கொடியேற்றமும் நடந்தது. இன்று சஷ்டி விழாவும், ஏப். 3ம் சக்தி கரகம், சக்திவேல் வீதி உலாவும், 4ம் தேதி திருவிளக்கு பூஜையும், 5ம் தேதி பங்குனி உத்திரத்தன்று காவடி பூஜை, பாலாபிஷேகம், சக்திவேல் வீதி உலா, பகல் 2 மணிக்கு தீமிதி விழா மற்றும் திருத்தேர் உற்சவம் நடக்க உள்ளது. நேற்று நடந்த கொடியேற்று விழாவில் ஊராட்சி தலைவர் தாட்சாயினி கார்த்திகேயன் மற்றும் விழா குழுவினர், கிராம் பொது மக்கள் கலந்து கொண்டனர்.