Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பழநி கோயிலில் கூட்டம் குலசேகரன்கோட்டை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் குலசேகரன்கோட்டை மீனாட்சி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரூ.70 லட்சத்தில் வடிவமைக்கப்பட்ட சுந்தரேஸ்வரர் கோவில் தேர் வெள்ளோட்டம்
எழுத்தின் அளவு:
ரூ.70 லட்சத்தில் வடிவமைக்கப்பட்ட சுந்தரேஸ்வரர் கோவில் தேர் வெள்ளோட்டம்

பதிவு செய்த நாள்

27 மார்
2023
05:03

தஞ்சாவூர்; கும்பகோணம் அருகே கொரநாட்டுக்கருப்பூர் அபிராமி அம்பிகா உடனுறை சுந்தரேஸ்வரர் சுவாமி கோவிலில் 70 லட்சம் ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட புதிய திருத்தேர் வெள்ளோட்டம் நடந்தது. இதில்  திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கொரநாட்டுக்கருப்பூரில் பெட்டி காளியம்மன் என்று அழைக்கப்படும் அபிராமி அம்பிகா உடனுறை சுந்தரேஸ்வர சுவாமி கோவில் மிகவும் பழமையானது. இக்கோயிலில் ஆண்டும் வைகாசி மாதம் விசாக நட்சத்திர தினத்தில் தேரோட்டம் கடந்த 1943ம் ஆண்டு வரை நடந்துள்ளது. பின்னர் திருத்தேர் சிதிலமடைந்ததால் தேரோட்டம் தடைபட்டது. இதையடுத்து புதிய தேர் செய்ய சென்னையை சேர்ந்த உபயதாரர் மகாலெஷ்மி சுப்ரமணியன் ஏற்பாட்டில், கடந்த 2 ஆண்டுகளாக புதிய தேர் உருவாக்கப்பட்டு தேர் வெள்ளோட்டம் நடந்தது. தை முன்னிட்டு நேற்று  சிறப்பு யாகசாலை பூஜை தொடங்கப்பட்டு, இன்று காலை மூன்றாம் கால யாகசாலை பூர்ணாஹூதியுடன் நிறைவுபெற்றது. இதனை தொடர்ந்து யாகசாலையில் இருந்து புனித நீர் கலசங்களை மங்கலவாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் கொண்டு சென்று திருத்தேரில் எழுந்தருள செய்தனர். 80 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த புதிய திருதேர் வெள்ளோட்டத்தை தருமபுர ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக பரமாசாரிய சுவாமிகள், சூரியனார்கோவில் ஆதீனம் 28வது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள் ஆகியோர் துவங்கி வைத்தனர். இதில் தேர் உபயதாரர் மகாலெஷ்மி சுப்ரமணியன், திருவடிக்குடில் சுவாமிகள் மற்றும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வெள்ளோட்டத்தில் புதிய தேரை வடம் பிடித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்:  திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar