ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆதிபிரம்மோத்ஸவம் கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மார் 2023 11:03
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா, ஆதி பிரம்மோத்ஸவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.
108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையானதான ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமிகோயிலில் சுபகிருத் வருடத்திற்கான் ஆதிபிரம்மோத்ஸவம் முதல் திருநாளான இன்று செவ்வாய் கிழமை காலை உற்சவர் ஸ்ரீநம்பெருமாள் அதிகாலை 3.45 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு துவஜாரோஹண மண்டபம் சென்றடைந்தார். பின்னர் கொடிப்படம் புறப்பட்டு கொடியேற்றம் மீனலக்னத்தில் காலை 5.45 மணி முதல் 6.30 மணி வரை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து, அங்கிருந்து ஸ்ரீநம்பெருமாள் புறப்பட்டு காலை 6.45 மணிக்கு கண்ணாடி அறை சென்றடைந்தார். இன்று மாலை ஸ்ரீநம்பெருமாள் உபயநாச்சிமார்களுடன் திருச்சிவிகையில் புறப்பாடு கண்டருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து, திருமஞ்சனம் கண்டருளி மூலஸ்தானம் சென்றடைகிறார்.