கோவை: சாய்பாபா காலனி, காளியம்மன் கோவில் வீதி எண் - 9-ல் இருக்கும் ஸ்ரீகாளியம்மன் கோவிலில் 62ம் ஆண்டு உற்சவம் இன்று துவங்கியது. இந்த விழாவானது வரும் ஏப்ரல் மாதம் 07.04.2023 வரை நடைபெறுகிறது. இதன் முதல்நாள் நிகழ்வாக பூச்சாட்டு உற்சவம் நடைபெற்றது. இதில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். இதில் ஏராளமான பக்தர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.