பதிவு செய்த நாள்
29
மார்
2023
09:03
திருப்பூர்:சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவில் ஆண்டவர் உத்தரவு பெட்டியில், துளசி, அருகம்புல், நந்தியாவட்டம் பூ ஆகியன வைத்து வழிபாடு செய்யப்படுகிறது.
திருப்பூர் மாவட்டம், காங்கயம், சிவன்மலையில் சுப்ரமணியசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள ஆண்டவர் உத்தரவு பெட்டியில், பக்தர்களின கனவில் முருகப்பெருமான் உணர்த்தும் பொருட்களை வைத்து தினமும் பூஜை நடக்கும். அவ்வாறு ஆண்டவர் உத்தரவு பெட்டியில், பூஜிக்கப்படும் பொருட்கள் சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அவ்வகையில், கடந்த 13ம் தேதி முதல், ஏழு கிலோ அரிசி, ஐந்து லிட்டர் நல்லெண்ணெய் வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது. நேற்று திண்டுக்கல் மாவட்டம், ரயில்வே ஸ்டேஷன் பகுதியை சேர்ந்த கற்பகம், 56 என்பரின் கனவில் அருகம்புல், துளசி, நந்தியாவட்டம் பூ உத்தரவானது. இதனால், ஆண்டவர் உத்தரவு பெட்டியில், மூன்று பொருட்களும் வைத்து பூஜை செய்யப்படுகிறது. கோவில் சிவாச்சாரியர்கள் கூறுகையில்,ஆண்டவர் உத்தரவு பெட்டியில் எந்த பொருள் வைத்து பூஜை செய்யப்படுகிறதோ அந்த பொருள் சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது, துளசி, நந்தியாவட்டம் பூ, அருகம்புல் வைக்கப்பட்டுள்ளது. மூன்றுமே மருத்துவ குணங்கள் வாய்ந்தவை என்பதால், இதன் தாக்கம் போகப்போக தெரியவரும் என்றனர்.