காளஹஸ்தி பட்டாபி ராமசுவாமி கோவிலில் சீதாராமர் திருக்கல்யாணம் : ஏற்பாடுகள் தீவிரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29மார் 2023 11:03
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயில் சார்பில் ஸ்ரீ சீதாராமர் திருக்கல்யாணம் இம்மாதம் 30ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெறவுள்ளதாக தேவஸ்தான தலைவர் அஞ்சூரு தாரக. சீனிவாசுலு தெரிவித்தார். முதன்முறையாக ஸ்ரீ காளஹஸ்தியில் உள்ள நேரு வீதியில் பக்தர்களுக்காக திருக்கல்யாண அரங்கம் அமைக்கப்பட்டு சீதா ராமர் திருக்கல்யாண உற்சவம் நடத்தவுள்ளதாக தெரிவித்தார்.
ஸ்ரீகாளஹஸ்தி தேவஸ்தானம் சார்பில் நேரு வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ பட்டாபி ராமசுவாமி கோவிலில் நவமி ஏற்பாடுகளை அஞ்சூரு சீனிவாசுலு, கோவில் பொறியாளர்களுடன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நவமி நாளன்று தேவஸ்தானம் சார்பில், ஸ்ரீ சீதாராமருக்கு திருக்கல்யாணம் நடைபெற இருப்பதைக் குறித்து ஆலோசனை நடத்தினர். கடந்த ஆண்டுகளில் ஸ்ரீ பிரசன்ன வரதராஜ சுவாமி கோவில் வளாகத்தில் திருக்கல்யாணம் நடைப்பெற்று வந்த நிலையில் இவ்வாண்டு புதிய ராமர் கோயில் கட்டப்பட்டதை தொடர்ந்து ராமர் கோயிலுக்குள் திருக் கல்யாண உற்சவத்தை அதிகமான பக்தர்கள் கல்யாண உற்சவத்தை காண (அமர முடியாததால்), சேர்மன் அஞ்சுரு சீனிவாசுலு தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் விவாதித்தனர். இந்நிலையில் நேரு வீதியில் உள்ள ராம மந்திரத்திலேயே அனைத்து பக்தர்களும் பொது மக்களும் திருக் கல்யாண விழாவை கண்டுகளிக்கவும், பொதுவெளியில் கல்யாண உற்சவத்தை நடத்தவும் கல்யாண மேடை அமைக்க வேண்டும் என ஆலோசிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சிவன் கோவில் நிர்வாக அதிகாரி மற்றும் இன்ஜினியரிங் பணியாளர்கள் மற்றும் போலீசாரை திருக்கல்யாண உற்சவத்திற்கான அனைத்து ஏற்பாடுகள் செய்ய உத்தரவிட்டனர். வரும் 30ம் தேதி, போலீஸ் அதிகாரிகளுடன் கலந்துரையாடி, நேரு சாலையில் போக்குவரத்தை நகருக்குள் (நேரு வீதிக்குள் வர )முற்றிலும் தடை செய்து, போக்குவரத்தை திருப்பி விடுமாறு கூறினர். ஸ்ரீ சீதாராமரின் திருக்கல்யாண உற்சவம் காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 12 மணி வரை அபிஜித் லக்னத்தில் நடக்கவுள்ளதாக சிவன் கோயில் அர்ச்சகர்கள் ஸ்ரீனிவாஸ் சர்மா தெரிவித்தார். இந்த ஆய்வில் கோயில் அர்ச்சகர்கள் பொறியியல் துறையினர் கலந்து கொண்டனர்.