ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி காளியம்மன் கோயில் பொங்கல் விழா நடந்தது. நான்கு நாட்கள் நடந்த நிகழ்ச்சியில் முதல் நாளில் திருமஞ்சள் நீர் குடம் அழைத்து வரப்பட்டு மாவிளக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. 2, 3 ம் நாளில் பக்தர்கள் அம்மனுக்கு பொங்கலிட்டு, தீச்சட்டி, பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. 4ம் நாளில் நாதஸ்வர இசை முழங்க அம்மன் சிம்ம வாகனத்தில் நகர்வலம் சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஆண்டிபட்டி உட்பட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.