பழநி: பழநி, மலைக்கோயில் சென்றுவர பயன்படும் ரோப் கார் சேவை, இன்று பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட உள்ளது. பழநி முருகன் மலைக்கோயிலுக்கு ரோப் கார், வின்ச், படிப்பதை, யானைப்பாதை வழியே சென்று வரலாம். இதில் ரோப் கார் சேவையில் மூன்று நிமிடத்தில் மலைக்கோயில் செல்ல முடியும். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரோப் கார் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பராமரிப்பு பணி இன்று (மார்ச்.30) நடைபெற உள்ளது. இன்று மட்டும் ரோப் கார் சேவை நிறுத்தப்பட உள்ளது. எனவே பக்தர்கள் மலைக்கோயில் செல்ல வின்ச், படி பாதை, யானைப்பாதை பயன்படுத்துமாறு கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.