கணேசபுரம் மாரியம்மன் கோயில் விழா ஏப்.2 கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30மார் 2023 02:03
காரைக்குடி: காரைக்குடி கணேசபுரம் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா ஏப்.2 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. காரைக்குடியில் உள்ள கணேசபுரம் மாரியம்மன் கோயில் 94 ஆம் ஆண்டு பங்குனி பொங்கல் திருவிழா நாளை பூச்செரிதல் விழாவுடன் தொடங்குகிறது. ஏப்.2 ஆம் தேதி அதிகாலை மகா கணபதி ஹோமமும் காலை 7.30 மணிக்கு மேல் கொடியேற்றமும், காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான பால்குடத் திருவிழா ஏப்.9 ஆம் தேதி நடைபெறுகிறது. அன்று மாலை கரகம், மது முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சியும் பொங்கல் விழாவும் நடைபெறுகிறது. ஏப்.10 ஆம் தேதி அம்பாள் திருவீதி உலா நடைபெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கணேசபுரம் மாரியம்மன் கோயில் நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்து வருகின்றனர்.