கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி, மங்களாம்பட்டி மந்தை பகவதியம்மன் கோயில் திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. முதல் நாள் ஆன நேற்று முன்தினம்
பெருமாள் ஊருணியில் இருந்து புதிதாக அம்மன் சிலை செய்து அலங்காரம் செய்யப்பட்டு கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. பிறகு சேவல் வெட்டி பொங்கல் வைத்து சாமி கும்பிட்டனர். பின்னர் மாவிளக்கு வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று (மார்ச் 29) கோயில் முன்பு கிடா வெட்டும் நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து கோயிலில் இருந்து அம்மன் சிலை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பெருமாள் ஊருணியில் கரைக்கும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இந் நிகழ்ச்சியில் உடப்பன்பட்டி, அய்யாபட்டி, குன்னாரம்பட்டி, மங்களாம்பட்டி உள்ளிட்ட 10 கிராமங்களை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.