Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பகவதி அம்மன் கோயில் திருவிழா அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மானாமதுரையில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மார்
2023
02:03

மானாமதுரை: மானாமதுரை அருகே வலசை கிராமத்தில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி வரலாற்று ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வலசை கிராமத்தில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழியை தென்னக வரலாற்று மையத்தைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர்கள் மீனாட்சி சுந்தரம்,சிவக்குமார், தருணேஷ்வரன் மற்றும் கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவுக் கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் முனைவர் P.தங்கமுத்து ஆகியோர் அங்கு களப்பணி செய்து கண்டுபிடித்துள்ளனர்.இது குறித்து அவர்கள் கூறுகையில், மானாமதுரை அருகே உள்ள வலசை கிராமப் பகுதியில் நத்தபுரக்கி செல்லும் தார் சாலை அருகே காட்டுப் பகுதியில் மழை பெய்து மண் அரிப்பு ஏற்பட்டதால் இந்த முதுமக்கள் தாழி சற்று வெளியே தெரிய வந்துள்ளது.

முதுமக்கள் தாழிகள் என்பது பண்டைய தமிழகத்தில் இறந்தவர்களின் உடல்களை வைத்து மண்ணில் புதைக்கப் பயன்படுத்தப்பட்ட புதைகலன்கள், ஈமத்தாழிகள் என்றும் அழைக்கின்றனர். இதைப் பற்றி சங்கப் பாடல்களிலும் குறிப்புகள் உள்ளது. குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் பற்றி ஐயூர் முடவனார் பாடிய புறநானூற்றுப் பாடல் (புறம் 228) முதுமக்கள் தாழி பற்றி குறிப்பிடுகிறது. ஒருவர் இறந்த பின்னர் அவரது உடலை அல்லது எலும்புகளை அல்லது உடலை எரித்த சாம்பலை அவர் பயன்படுத்திய பொருட்களுடன் ஒரு தாழியில் வைத்துப் புதைத்து விடுவது வழக்கம். இப்படி புதைக்கப்பட்டத் தாழிகள் தமிழ்நாட்டில் பல இடங்களில் கிடைத்துள்ளன. உடல் செயலிழந்த முதியவர்களை உயிருடன் புதைக்கவும் இத்தாழிகள் பயன்பட்டன என்ற கருத்தும் நிலவுகிறது. மானாமதுரை பகுதியில் பல இடங்களில் முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன. 2ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இப்பகுதியில் மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரமாக இந்த முதுமக்கள் தாழி உள்ளது என்று கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 14 ஆண்டுகளுக்கு பின்பு நாளை அதிகாலை ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி அருகே போகலூர் ஒன்றியம் அரியகுடிபுத்தூர் கிராமத்தில் அம்மன் கோயில் ... மேலும்
 
temple news
பழநி; பழநி கோயிலுக்கு விடுமுறை தினத்தை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் அதிகம் இருந்தது. பழநிக்கு ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
சிவகாசி; சிவகாசி அருகே திருத்தங்கலில் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் ஆனி பிரமோற்சவ திருவிழாவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar