அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோயிலில் கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30மார் 2023 02:03
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கலை முன்னிட்டு கொடியேற்றம் நடந்தது.
அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட முத்து மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக கொடி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு உறவின்முறை அலுவலகத்தில் பூஜைகள் செய்யப்பட்டு பின்பு முத்துமாரியம்மன் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து 15 நாட்கள் நடக்கும் விழாவில் 8 ம் நாள் பொங்கள் விழாவும் 9 ம் நாள் விழாவாக பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடக்கும். பக்தர்கள் பொங்கல் வைத்து, பூக்குழி இறங்கி, தங்கள் நேர்த்தி கடனை அம்மனுக்கு செலுத்துவர். கோயில் கலை அரங்கத்தில் கலை நிகழ்ச்சிகள் நடக்கும். ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.