பதிவு செய்த நாள்
31
மார்
2023
11:03
குலசேகரம்:குலசேகரம், குலசேகரம் இட்டகவேலி நீலகேசி அம்மன் முடிப்புரையில் மாமியார், மருமகள் கொடுமையை சித்தரிக்கும் கமுகு எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. இட்டகவேலி நீலகேசி அம்மன் முடிப்புரையில் அம்மயிறக்க திருவிழா கடந்த 22ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. விழாவில், முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தூக்கநேர்ச்சை கடந்த 28ம் தேதி நடந்தது. இதில், 153 பச்சிளம் குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நிறைவேற்றப் பட்டது. மற்றுமொரு முக்கிய நிகழ்வான மாமியார், மருமகள் கொடுமையை சித்தரிக்கும் கமுகு எழுந்தருளல் நேற்று நடந்தது. கமுகின் மூட்டில் பூஜை செய்து பின் மரத்தை வேரோடு பிடுங்கி எடுத்து அதன் மூட்டு பகுதியை அம்மன் பக்தர்களும், கொண்டை பகுதியை இட்டகவேலி குடும்பத்தாரும் இழுத்தனர். மரம் ஒரு அடிமுன் செல்ல மீண்டும் அதே இடத்திற்கு வர இப்படியாக அங்கும் இங்கும் இழுத்து பின் விழா நடக்கும் பகுதியில் உள்ள குளத்தில் போட்டு இழுத்து ஒருவழியாக மூட்டு பகுதியை பிடித்த அம்மன் பக்தர்கள் வெற்றி பெற்று கமுகு மரத்தை கோவில் முன் நாட்டி அதன் மேல் தீபம் ஏற்றினர். அதைத்தொடர்ந்து அம்மன் எழுந்தருளல் நடந்தது.
இன்று (31ம் தேதி) பொங்கல் வழிபாடு நடக்கிறது. இதில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டு அம்மனை வழிபடுகின்றனர். குலசேகரம் இட்டகவேலி நீலகேசி அம்மன் முடிப்புரையில் மாமியார், மருமகள் கொடுமையை சித்தரிக்கும் கமுகு எழுந்தருளல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இட்டகவேலி நீலகேசி அம்மன் முடிப்புரையில் அம்மயிறக்க திருவிழா கடந்த 22ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. விழாவில், முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தூக்கநேர்ச்சை கடந்த 28ம் தேதி நடந்தது. இதில், 153 பச்சிளம் குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்பட்டது. மற்றுமொரு முக்கிய நிகழ்வான மாமியார், மருமகள் கொடுமையை சித்தரிக்கும் கமுகு எழுந்தருளல் நேற்று நடந்தது. கமுகின் மூட்டில் பூஜை செய்து பின் மரத்தை வேரோடு பிடுங்கி எடுத்து அதன் மூட்டு பகுதியை அம்மன் பக்தர்களும், கொண்டை பகுதியை இட்டகவேலி குடும்பத்தாரும் இழுத்தனர். மரம் ஒரு அடிமுன் செல்ல மீண்டும் அதே இடத்திற்கு வர இப்படியாக அங்கும் இங்கும் இழுத்து பின் விழா நடக்கும் பகுதியில் உள்ள குளத்தில் போட்டு இழுத்து ஒருவழியாக மூட்டு பகுதியை பிடித்த அம்மன் பக்தர்கள் வெற்றி பெற்று கமுகு மரத்தை கோவில் முன் நாட்டி அதன் மேல் தீபம் ஏற்றினர். அதைத்தொடர்ந்து அம்மன் எழுந்தருளல் நடந்தது. இன்று (31ம் தேதி) பொங்கல் வழிபாடு நடக்கிறது. இதில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டு அம்மனை வழிபடுகின்றனர்.