பதிவு செய்த நாள்
31
மார்
2023
07:03
திருத்தணி:திருத்தணி, மடம் கிராமம், அனுமந்தபுரம் தெருவில் உள்ள கல்யாணராமர் கோவிலில் ஆண்டுதோறும் ஸ்ரீராமநவமி விழா ஒட்டி, 9 நாட்கள் பிரம்மோற்சவ விழாவாக வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இக்கோவிலின், 56வது ஆண்டு ராமநவமியையொட்டி, நேற்று காலை கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. இந்த விழா, ஏப்.,9ம் தேதி வரை நடைபெறுகிறது. அதாவது நாளை, காலை 10:30 மணிக்கு சீத்தராம கல்யாண வைபவம் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து, 8ம் தேதி, காலை 10:30 மணிக்கு ராமர் பட்டாபிஷேகம், 9ம் தேதி மாலை, 6:00 மணிக்கு விடையாற்றி உற்சவம் மற்றும் உற்சவர் வீதியுலா நடைபெறுகிறது. முன்னதான அன்று மதியம் 1:00 மணிக்கு உறி அடித்தல், மாலை வசந்த உற்சவம் மற்றும் வீதியுலா நடக்கிறது.