நெல்லையப்பர் கோயில் உண்டியல் வருமானம் ரூ 19 லட்சம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மார் 2023 07:03
திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயில் உண்டியல்கள் எண்ணப்பட்டதில் 19 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம், 44 கிராம் தங்கமும் பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்டிருந்தது. திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயிலில் கடந்த டிசம்பர் 13ம் தேதி உண்டியல்கள் எண்ணப்பட்டன. மூன்றரை மாதங்களுக்கு பிறகு நேற்று 21 நிரந்தர உண்டியல்களும் எண்ணப்பட்டன. 19 லட்சத்து 15 ஆயிரத்து 563 ரூபாய் ரொக்கமும், 44.900 கிராம் எடையுள்ள பல மாற்று பொன் இனங்களும் 24 கிராம் எடையுள்ள பலமாற்று வெள்ளி இனங்களும், வெளிநாட்டு பணத்தாள்கள் 31ம் கிடைக்கப்பெற்றன.