காரைக்கால் திருநள்ளார் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலுக்கு நாட்டில் பல பகுதியில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். சனிஸ்வர பகவான் கோவிலில் தங்கதேர்,அன்னதானம் உள்ளிட்டவைக்கு காணிக்கை அளிக்க கோவிலில் பல இடங்களில் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அன்னதானம் உண்டியலும் நிரம்பியதால் கோவில் நிர்வாகம் சார்பில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது.இதில் பக்தர்கள் வழங்கிய காணிக்கை ரூ.2.7கோடி மதிப்பில் வசூலானது காணிக்கை பணம் பாதுகாப்புடன் வங்கியில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவில் சிறப்பு அதிகாரி தெரிவித்தனார்.