ராஜபாளையம்: ராஜபாளையம் வட்டார பகுதி பெருமாள் கோயில்களில ராம நவமி கொண்டாட்டம் நடந்தது. ராஜபாளையம் ராமசாமி கோயிலில் அதிகாலை 3:00 மணிக்கு தொடங்கி சங்கல்பம் ஹோமத்துடன் தொடங்கி காலை 7:00 மணிக்கு திருமஞ்சனம், அலங்காரம், திருவாராதனை 11:00 மணிக்கு அன்னதானம் இரவு 6:00 மணிக்கு சுவாமி உலா நடந்தது.
* ஷீரடி சாய்பாபா கோயிலில் காலை ஆரத்தி மந்திர ஹோமத்துடன், 10:00 மணிக்கு ருத்ர ஜெபம், சிறப்பு அலங்காரம் 12:45 மணிக்கு அன்னதானம் மாலை 7:00 மணிக்கு பல்லக்கு உற்ஸவம் நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
இதே போல் நகர் பகுதி பிரம்மானந்த பஜனை மடாலயம், சம்பந்தபுரம் சோலைமலை பெருமாள் கோயில், வேட்டை வெங்கடேச பெருமாள் கோயில், கோதண்டராமசாமி கோயில் உட்பட பல்வேறு இடங்களில் சிறப்பு வழிபாடு நடந்தன.