Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் ... வைத்தியநாத சுவாமி கோவிலில் பஞ்ச மூர்த்திகள் தெருவடைச்சான் சகோபுர வீதியுலா வைத்தியநாத சுவாமி கோவிலில் பஞ்ச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலக புகழ் பெற்ற திருவாரூர் தியாகராஜர் ஆழித்தேரோட்டம் துவக்கம் : ஆரூரா தியாகேசா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
உலக புகழ் பெற்ற திருவாரூர் தியாகராஜர் ஆழித்தேரோட்டம் துவக்கம் : ஆரூரா தியாகேசா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

01 ஏப்
2023
08:04

திருவாரூர் : உலக புகழ் பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் கோலாகலமாக துவங்கியது.

திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோவில் பஞ்சபூத தலங்களில் பூமிக்குரிய தலமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. இங்கு நடைபெறும் ஆழித்தேரோட்டம் உலக புகழ் பெற்றது. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமைமிக்கது திருவாரூர் தேர். ஒவ்வோர் ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

96 அடி உயரம், 300 டன் எடை கொண்ட ஆழித்தேரின்  மேல் பகுதி 4 அடுக்குகளாக மூங்கில் மற்றும் சவுக்கு மரங்களை கொண்டு கட்டப்பட்டு கீற்று வேய்ந்து, 7 ஆயிரத்து 500 சதுர அடி கொண்ட தேர் சீலைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மிக பிரமாண்டமான ஆழித்தேரின் தியாகராஜா சுவாமி வீற்றிருக்க 4 வீதிகளில் வீதியுலா வருவதை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வர். இந்தாண்டு ஆழித்தேர் திருவிழா அஸ்த நட்சத்திரத்தில் கொடியேறி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆழித்தேரோட்டம் இன்று ஆயில்ய நட்சத்திரத்தில் சிறப்பாக துவங்கியது. இன்று காலை 7.30 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்பட்டது. தொடர்ந்து அம்பாள், சண்டிகேஸ்வரர் தேர்களும் வடம் பிடிக்கப்பட்டது. முன்னதாக அதிகாலை 5 மணிக்கு விநாயகர், சுப்பிரமணியர் தேர் வடம் பிடிக்கப்பட்டு ஆழித்தேரின் முன்பு நிறுத்தப்பட்டு ஆரூரா தியாகேசா கோஷம் முழங்க லட்சக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar