சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோயிலில் புஷ்பயாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மார் 2023 08:03
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோயிலில் பங்குனி மாத 11 நாள் ப்ரம்மோற்சவ விழா அர்ச்சகர் ஸ்ரீபதி தலைமையில் மார்ச் 22.,ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. இவ்விழாவின் தொடர்ச்சியாக தினசரி மாலை சுவாமி புறப்பாடு நடந்தது. இதையடுத்து மார்ச் 28ல் ஸ்ரீராமசந்திரர் சீதாதேவி திருக்கல்யாண வைபவம் நடந்தது. தொடர்ந்து மார்.30ல் கிருஷ்ண பட்சம் புனர்பூச நட்சத்திரத்தில் நவமி திதியில் ராமர் ஜெனன சிறப்பு அபிஷேகமும், தீர்த்தவாரி நிகழ்வும் நடந்தது. இவ்விழாவின் உபயதாரர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இவ்விழாவின் 10ம் நாளான இன்று ஸ்ரீதேவி பூதேவி சமேத ஜெனக நாராயண பெருமாளுக்கு புஷ்பயாகம் நடந்தது. இதையடுத்து நாளை (ஏப்.1)ல் உத்ஸவசாந்தி, விடையாற்றி உற்சவம் நிகழ்வுடன் விழா நிறைவு பெறுகிறது. செயல் அலுவலர் சுதா, தக்கார் அங்கயற்கண்ணி, கணக்கர் முரளிதரன் ஆகியோர் விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.