பதிவு செய்த நாள்
20
செப்
2012
10:09
திசையன்விளை: திசையன்விளை உலக மீட்பர் ஆலய திருவிழா (21ம் தேதி) துவங்கி அக்.1ம் தேதி வரை நடக்கிறது. விழாவில் முதலாம் திருநாளில் திருப்பவனி, கூட்டு திருப்பலி, கொடியேற்றம், ஜெபமாலை, மன்றாட்டு மாலை, மறையுரை, நற்கருணை ஆசீர், ஆர்.சி.துவக்கப்பள்ளி திருயாத்திரை, கலை நிகழ்ச்சி, பபியான்ஜோசப் மறையுரை ஆகியன நடக்கிறது. இரண்டாம் திருவிழா முதல் எட்டாம் திருவிழா வரை ஹோலி ரெடீமர், ஸ்டெல்லா மேரீஸ் பள்ளிகள், ரட்சகர் இளையோர் இயக்கம், அமலோற்பவ மாதா சபை, மீட்பர் மறை கல்வி மன்றம், திருக்குடும்ப சபை, மரியாயின் சேனையர், வளனார் ஆண்கள் இயக்கம் ஆகியோர் திருயாத்திரை, கலை நிகழ்ச்சி, திருப்பவனி, திருப்பலி, ஜெபமாலை, மன்றாட்டு மாலை, நற்கருணை ஆசீர், லூர்து அமிர்தராஜ், அந்தோணிபிராங், டிவைன் தியான குழுவினர் மறையுரை ஆகியன நடக்கிறது. ஒன்பதாம் திருவிழாவில் பங்கு மேய்ப்பு குழு திருயாத்திரை, கலை நிகழ்ச்சி, திருப்பவனி, திருப்பலி, ஜெபமாலை, மன்றாட்டு மாலை, அந்தோணி ஜெகதீஷ் மறையுரை, திருவிழா மாலை ஆராதனை, நற்கருணை பவனி, ஆலயத்தை சுற்றி சப்பர பவனி ஆகியன நடக்கிறது. பத்தாம் நாளில் புதுநன்மை பெறும் சிறுவர், சிறுமியர் திருயாத்திரை, திருப்பவனி, பெருவிழா கூட்டு திருப்பலி, நகர வீதிகளில் சப்பர பவனி, நற்கருணை ஆசீர் ஆகியன நடக்கிறது. அக்.1ம் தேதி நன்றி திருப்பலி, கொடியிறக்கம், அசன விருந்து ஆகியன நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பங்குதந்தை தோமினிக் அருள்வளன் மற்றும் அருட் சகோதரிகள், பங்கு மேய்ப்பு பணிக் குழுவினர், பக்த சபையினர், அன்பியங்கள் செய்து வருகின்றன.