ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆதி பிரம்மோத்ஸவம் 5ம் நாள் : சேஷவாகனத்தில் நம்பெருமாள் உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஏப் 2023 09:04
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆதி பிரம்மோத்ஸவத்தின் 5ம் நாளான இன்று காலை சேஷவாகனத்தில் நம்பெருமாள் உலா வந்து அருள்பாலித்தார்.
108 வைணவ திவ்யதேசங்களில் பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடைபெற்று வரும் ஆதி பிரம்மோத்ஸவத்தின் 5ம் திருநாளான இன்று காலை 8.00 மணியளவில் உற்சவர் ஸ்ரீநம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து சேஷவாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து ரெங்கவிலாச மண்பத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.