திரவுபதி அம்மன் கோயில் விழா: துஷ்ட சக்திகளை விரட்டும் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஏப் 2023 10:04
திருவாடானை: திருவாடானை திரவுபதி அம்மன் கோயில் திருவிழா மார்ச் 22ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக மார்ச் 26ல் திரவுபதி அம்மன், அர்ச்சுனன் திருக்கல்யாணம் நடந்தது. அதனை தொடர்ந்து பீமன் வேடமிட்டு வீதி உலாவின் போது வீடுகளில் பீமனை வரவேற்று மக்கள் உபசரித்தனர். பாரத போரில் துரியோதனன் இறந்ததை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு திரவுபதி அம்மன் மகிழ்ச்சியுடன் ஆடி சென்றதும், கவுரவர்களை விரட்டி அடிப்பது போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று காலை பூக்குழி இறங்குதல் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.