பரமக்குடி: பரமக்குடி அனுமார் கோதண்டராமசாமி கோயிலில் ராமநவமி விழாவில் தீர்த்தவாரி உற்சஸம் நடந்தது.
இக்கோயிலில் ஆஞ்சநேயர் புளிய மரமாக இருந்து அருள் பாலிக்கிறார். மேலும் இங்கு ஆஞ்சநேயருக்கு உருவ வழிபாடு இன்றி புளிய மரத்தையே மூலவராக வணங்கி வருகின்றனர். இப்புளிய மரத்தில் வருடம் முழுவதும் காய்கள் காய்த்து தானாகவே கீழே விழுகின்றன. இச் சிறப்பு வாய்ந்த கோயிலில் ராமர், சீதை, லட்சுமணன் தனி சன்னதியில் அருள்பாளிகின்றனர். ராமர் சன்னதி எதிரில் உள்ள கொடிமரத்தில், கருட கொடியேற்றப்பட்டு ராமநவமி விழா மார்ச் 22-ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. மார்ச் 30 ல் ராமநவமி விழாவும், நேற்று காலை சீதாராமர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. தொடர்ந்து இன்று காலை 10:00 மணிக்கு மேல் தீர்த்தவாரி உற்ஸவம் நடந்தது. அப்போது ராமர், சீதை, லட்சுமணனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பின்னர் தீபாராதனைக்கு பின் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.