பெரியகுளம்: பெரியகுளம் கவுமாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.
தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களில் பெரியகுளம் கவுமாரியம்மன் கோயிலும் முதன்மையில் உள்ளது. ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்டது. பக்தர்களுக்கு கேட்டவரம் கொடுக்கும் ஆயிரம் கண்ணுடையாள் கவுமாரியம்மனாக திகழ்வதால் செவ்வாய், வெள்ளிக்கிழமை மற்றும் ஆனி மாதம் திருவிழா காலங்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்வதற்கு வந்து செல்கின்றனர். இன்று வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகபூஜை மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை பூஜாரிகள் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.