ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி சேர்த்தி சேவை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஏப் 2023 06:04
திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடந்து வரும் பங்குனி உற்சவத்தின் ஒன்பதாவது திருநாளான இன்று ரெங்கநாதர், ரெங்கநாச்சியார் சேர்த்தி சேவை நடந்தது.
பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா 28ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி நம்பெருமாள் தினமும் வெவ்வேறு வாகனங்கில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 9ம் நாளான இன்று நம்பெருமாளும் தாயாரும் ஒருசேர இருக்கும் நம்பெருமாள் தாயார் சேர்த்தி சேவை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.