சீர்காழி கல்யாண ரெங்கநாதர் கோவிலில் தெப்ப உற்சவம்: ஆரத்தி எடுத்து பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஏப் 2023 07:04
மயிலாடுதுறை: சீர்காழி அருகே திருநகரி அமிர்தவல்லி தாயார் சமேத கல்யாண ரெங்கநாதர் கோவில் தெப்ப உற்சவம், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருநகரியில் 108 திவ்யதேசங்களில் 37வது தலமான அருள்மிகு அமிர்தவள்ளி தாயார் சமேத கல்யாணரெங்கநாதர் கோயில் அமைந்துள்ளது. திருமங்கை ஆழ்வார்,குரசேகர ஆழ்வார் ஆகியோரால் மங்களா சாசனம் செய்யப்பட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவிலாகும் திருமங்கை ஆழ்வார் அவதார ஸ்தலமாக கருதப்படும் இக்கோவிலில் பங்குனி பெருவிழா உற்சவம் கடந்த மாதம் 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது இவ்விழாவின் முக்கிய திருவிழாவான பன்னிரண்டாம் நாள் திருவிழா இக்கோயிலின் தீர்த்த குளமான க்கிலாதினி புஷ்கரணியில் தெப்ப உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. தெப்ப உற்சவத்தை முன்னிட்டு கோயிலில் அருள்மிகு அமிர்தவள்ளித் தாயார் சமேத கல்யாண ரெங்கநாதருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து பெருமாள், தாயார், திருமங்கையாழ்வார் மற்றும் ராமானுஜர் பல்லக்கில் க்கிலாதினி புஷ்கரணிக்கு வந்து அங்கு அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பத்தில் எழுந்தருளினர். இதையடுத்து தெப்பம் மூன்று முறை தீர்த்தக்குளத்தை வலம் வந்தது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீப ஆரத்தி எடுத்து அமிர்தவள்ளி தாயார் சமேத கல்யாணரெங்கநாத பெருமாளை வழிபாடு செய்து தரிசித்தனர்.