காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் அருகில் உள்ள சுகப்பிரம்ம ஆசிரமத்தில் சத்குரு ஸ்ரீ வித்யாப்பிரகாசானந்தகிரி சுவாமிகளுக்கு சங்காபிஷேகம் செய்தனர். திருப்பதி எம்பி குருமூர்த்தி இதில் கலந்து கொண்டு பேசுகையில், வந்தே பாரத் ரயில் நமது (பிராந்தியங்களுக்கான) பகுதிக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளின் இணைப்பை அதிகரிக்க உதவும் என்றார்.
ஸ்ரீகாளஹஸ்தி சுக பிரம்ம ஆசிரமத்தில் ஆசிரம நிறுவனர் சத்குரு ஸ்ரீ வித்யா பிரகாசனந்தகிரி சுவாமிகளின் 110வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சுவாமி சிலைக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடத்தப்பட்டது. சுவாமி சிலைக்கு சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் ஸ்ரீ வித்யாப்பிரகாசானந்தகிரி சிலையை தரிசித்து வழிபட்டனர். இதில் திருப்பதி நாடாளுமன்ற உறுப்பினர் குருமூர்த்தி, ஸ்ரீ காளஹஸ்தி எம்எல்ஏ மதுசூதன் ரெட்டி, ஸ்ரீ காளஹஸ்தி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் அஞ்சுரு தாரக சீனிவாசலு மற்றும் நகர பிரமுகர்கள் இப் பூஜை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். ஆன்மிக சிந்தனையை வளர்க்க ஆசிரமம் அயராது பாடுபடுகிறது என்றார் எம்பி குருமூர்த்தி. நமது (பிராந்தியத்திற்கு) பகுதிக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து போக்குவரத்தை அதிகரிக்க வந்தே பாரத் ரயில் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும், பிரதமர் நரேந்திர மோடியினால் இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் அவர் கூறினார். இந்நிலையில் ஸ்ரீ வித்யா பிரகாஷானந்தகிரி சுவாமிகள் சனாதன தர்மத்தை உலகம் முழுவதும் பரப்பியவர் என்று ஆசிரம உத்தராதிகாரி ஸ்ரீ சம்பூர்ணானந்தகிரி சுவாமிகள் கூறினார்.