பதிவு செய்த நாள்
10
ஏப்
2023
04:04
பொள்ளாச்சி, உடுமலை சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில் சங்கடஹரசதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பங்குனி மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, பொள்ளாச்சி மகாலிங்கபுரம் சக்தி விநாயகர் கோவிலில், மாலை, 4:30 மணிக்கு ேஹாம பூஜைகள் நடைபெற்றன. 5:00 மணிக்கு அபிேஷகமும், 6:30 மணிக்கு அலங்கார பூஜையும் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் விநாயகப்பெருமான் அருள்பாலித்தார். பொள்ளாச்சி திப்பம்பட்டி பூங்கா நகர் சிவசக்தி கோவிலில், ராஜகணபதிக்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனை பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் விநாயகப்பெருமான் அருள்பாலித்தார். காளியண்ணன்புதுார் சித்தி விநாயகர் கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. * வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், நேற்று மாலை, 6:30 மணிக்கு விநாயகருக்கு சிறப்பு அபிேஷக பூஜை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. பூஜையில் சுமங்கலி பாக்கியத்துக்கு பெண்கள் மஞ்சள் கயிறு மாற்றிக்கொண்டனர். சங்கடம் போக்கும் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. * உடுமலை காந்திநகர் 2வது காலனியில் மங்கள விநாயகர் கோவிலில், சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். உடுமலை குட்டைத்திடல் சித்தி புத்தி விநாயகர் கோவில், அமராவதிநகர் சித்தி விநாயகர் கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடந்தன.