அவிநாசி;கருவலுாரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீமாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் தேர்த்திருவிழா நடைபெறம்.
இந்தாண்டு தேர்த்விழா, கடந்த 31ம் தேதி கிராம சாந்தியுடன், தொடங்கியது. கடந்த 1ம் தேதி கோவிலில் கொடியேற்றுதல் நிகழ்ச்சியை தொடர்ந்து, பல்வேறு பூத வாகனங்களில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். கடந்த 5ம் தேதி தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. மூன்று நாள் தேரோட்டம் நடந்தது. கடந்த 5ம் தேதி தேர் நிலையிலிருந்து,கிழக்கு ரத வீதிக்கு பக்தர்களால் இழுத்து நிறுத்தப்பட்டது. இரண்டாம் நாளான 6ம் தேதி கிழக்கு ரத வீதியில் இருந்து மேற்கு ரத வீதிக்கு இழுத்தனர். மூன்றாம் நாளில் தேரை பக்தர்கள் நிலை சேர்த்தனர். நேற்றுமுன்தினம் தெப்போற்சவம், காமதேனு வாகனம், பரிவேட்டை, குதிரை வாகன உற்சவம் நடந்தது. நேற்று அம்பாள் சப்பரத்தில், அன்ன வாகன உற்சவத்தில் புறப்படுதல், மஞ்சள் நீராட்டு முடிந்து, கொடி இறக்கப்பட்டது. தொடர்ந்து 12ம் தேதி பாலாபிஷேகம், மறு பூஜையுடன் தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது.