ஸ்ரீராதா திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஏப் 2023 04:04
உடுமலை:உடுமலை நாமத்வார் பிரார்த்தனை மையத்தில், ஸ்ரீராதா திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.
உடுமலை, காந்திநகர் பகுதியில் நாமத்வார் பிரார்த்தனை மையம் உள்ளது. இங்கு, ஸ்ரீமத் பாகனதம் ஆன்மிக சொற்பொழிவு மற்றும் ஸ்ரீ ராதா கல்யாண உற்சவம் நடந்து வருகிறது.இதில், நேற்று முன்தினம் முதல் 14ம் தேதி வரை ஸ்ரீமத் பாகவதம் உபன்யாசம் நடக்கிறது. தினமும் மாலை, 6:00 மணி முதல் 8:00 மணி வரை நாள்தோறும் நடக்கிறது. இதையொட்டி, நேற்று மையத்தின் சார்பில் ஸ்ரீராதா திருக்கல்யாண உற்சவம் நடந்தது. காலை, 9:00 மணிக்கு திருக்கல்யாண திருப்பணிகள் துவங்கியது. தொடர்ந்து, 11:00 மணியளவில் சுவாமிகளுக்கு திருமண வைபோகம் நடந்தது. இதில் உடுமலை மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.