பழநி: பழநியில் பக்தர்கள் வருகை அதிகம் இருந்தது. கடுமையான வெயிலால் அவதிப்பட்டனர்.
பழநியில் விடுமுறை நாளை முன்னிட்டு பக்தர்கள் வருகை அதிகம் இருந்தது. மலைக்கோயிலில் உள்ள காலை முதல் வின்ச், ரோப் கார், தரிசன வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சென்றனர். தீர்த்த கலசங்களுடன் உள்ளூர், வெளி மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்தனர். கடுமையான வெயில் காரணமாக கிரிவலம் வர சிரமமடைந்தனர். மேலும் மலைக்கோயில் படிப்பாதை வழியாக செல்ல சன்னதி வீதி, பாத விநாயகர் கோவிலில் இருந்து கிரிவீதியில் பொதுமக்கள் குடமுழுக்கு நினைவரங்கம் வரை நடந்து வருகின்றனர். இதனால் கிரிவீதியின் வெப்பம் தாங்காமல் பொதுமக்கள் ஓட்டம் எடுத்து குடமுழுக்கு நினைவரங்கம் வரை செல்கின்றனர். குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். கிரி வீதி, அருள்ஜோதி வீதி, பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பழநி, அடிவாரம் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகம் உள்ளதால் பக்தர்கள் அதிக சிரமம் அடைந்து வருகின்றனர்.