ஆழ்வார்குறிச்சி: ஆழ்வார்குறிச்சி சிவசைலநாதர் கோயிலில் பங்குனி உற்சவ திருவிழாவில், நடராஜர் பச்சை சாத்தி கோலத்தில் அருள்பாலித்தார். சிவசைலம் சிவசைலநாதர் - பரமகல்யாணி அம்பாள் கோயில் பங்குனி தேர் திருவிழா ஆழ்வார்குறிச்சியில் வைத்து நடக்கிறது. 7ம் திருநாளான நேற்றுமுன்தினம் நடராஜர் பிரம்ம அம்சத்தில் ஆழ்வார்குறிச்சிக்கு வெள்ளிச்சப்பரத்தில் எழுந்தருளினார். 8ம் திருநாளான நேற்று அதிகாலை வெள்ளைசாத்தி கோலத்தில் காட்சியளித்தார். பின்னர் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மாலையில் நடராஜர் பச்சைசாத்தி கோலத்தில் அருள்பாலித்தார். விழாவில் சென்னை சிம்சன் நிறுவன சேர்மன் கிருஷ்ணமூர்த்தி, பவானி கிருஷ்ணமூர்த்தி, கோவை பை மெட்டல் பயரிங்ஸ் நிர்வாக இயக்குனர் நாராயணன்(எ) குமார், அண்ணல் அனந்தராம கிருஷ்ணன் குடும்பத்தினர் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் சுவாமி, அம்பாள் ரத வீதி து, நடராஜரை வழியனுப்பும் நிகழ்ச்சி நடந்தது. ரும் 13ம் தேதி மாலை ம் நடக்கிறது. 14ம் தேதி மாலை சுவாமி, அம்பாள் வெள்ளி சப்பரத்தில் சிவசைலம் எழுந்தருளுகின்றனர். ஏற்பாடுகளை தக்கார் ரேவதி, ஆய்வாளர் சரவணக்குமார், செயல் அலுவலர் முருகன் மேற்பார்வையில், பங்குனி உற்சவ கமிட்டியினர், உபயதாரர்கள் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.