பதிவு செய்த நாள்
11
ஏப்
2023
10:04
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே ஜோதிபுரத்தில் உள்ள தண்டு மாரியம்மன் கோவில், 67ம் ஆண்டு திருவிழாவையொட்டி, இன்று இரவு பூ கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடக்கிறது.
கடந்த, 4ம் தேதி மாலை, 6:00 மணிக்கு விக்னேஸ்வரர் பூஜையுடன் விழா துவங்கியது. இன்று இரவு, 10:00 மணிக்கு பூ கம்பம் நடுதல், 12ம் தேதி பூவோடு எடுத்தல், 17ம் தேதி திருக்கல்யாணம், 18ம் தேதி சக்தி அழைத்தல், 19ம் தேதி சக்தி கரகம் கோயில் வந்தடைதல், தொடர்ந்து அலங்கார பூஜை, பொங்கல், மாவிளக்கு, அக்னி கரகம், பூ கம்பம் அகற்றுதல், மறுநாள் மஞ்சள் நீர் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. வெள்ளிக்கிழமை வசந்த பூஜையுடன் விழா, நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை தண்டுமாரியம்மன் கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.