பதிவு செய்த நாள்
11
ஏப்
2023
10:04
பாலக்காடு: கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் பூங்குன்னம் அருகே உள்ளது புகழ்பெற்ற ஸ்ரீ சீதாராம சுவாமி கோவில் மற்றும் ஸ்ரீ சிவன் கோவில். இக்கோவில்களின் கருவறையின் முன்பக்கம் தங்கம் பூசுதல், ஒற்றைக்கலில் செதுக்கிய 55 அடி உயரம் உள்ள ஹனுமன் சிலை அமைத்தல், போன்று பிரமாண்டமாக புதுப்பித்தல் பணிகள் முடிந்து வருகிற 27ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. கும்பாபிஷேகத்திற்கு முன்னதாக வரும் ஏப்., 20ம் தேதி முதல் கலை நிகழ்ச்சிகள் உட்பட உள்ள நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஸ்ரீ சீதாராமசுவாமி கோவிலில் 21ம் தேதி முதல் 26ம் தேதி வரை அனுஜ்னா, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம், வாஸ்து பூஜை, நவகலச ஸ்தாபனம், மிருத்சம்கிரகணம், அங்குரார்ப்பணம், பிரவேச பலி, அக்னி பிரதிஷ்ட்டை, கும்ப ஸ்தாபனம், மகா சாந்தி சமித் ஹோமம், மகா சாந்தி ஆஜ்யா ஹோமம், பூர்ணஹூதி, அபிஷேகம், எஜமான சங்கல்பம், ஆச்சாரிய ரித்விக் வரணம், அக்னி மடானம், கும்ப பூஜை, கலாகர்ஷணம், யாகசாலை பிரவேசம், சப்த கலசம், ரக்ஷா பந்தனம், சர்வ தேவார்ச்சனை, நித்யா ஆராதனை, ஆதிவாசம், பிரதான ஹோமம், மதான ஹோமம், அஷ்டபந்தனம், ஸ்வர்ண பந்தனம், சதுர்விம்ஷதி கலசம், வசோதர ஹோமம் ஆகிய சிறப்புகள் ஸ்ரீ சீதாராமசுவாமி கோவிலில் நடைபெறுகின்றன.
அதேபோல் ஸ்ரீ சிவன் கோவிலிலும் இத்திருநாட்களில் ஆச்சாரிய வரணம், கணபதி பூஜை, பிரசாத சுத்தி, பலி, பிம்ப சுத்தி, ஸ்தல சுத்தி, முளைபூஜை, அத்தாழபூஜை, பிராயசித்த ஹோமம், அபிஷேகம், பகவதி சேவை, சுவாசாந்தி ஹோமம், தத்துவ ஹோமகுண்டத்திற்கு அக்னி ஜனனம், ஹோமம், தத்துவ கலச பூஜை, பானை தத்துவ கலச அபிஷேகம், ஜலத்ரோனி பூஜை, பிரம்ம கலச பூஜை, ஆதிவாச பிரார்த்தனை, அக்னி ஜன்னம், சம்ஹார தத்துவ கலச பூஜை, நித்ர கலச பூஜை, சய்ய பூஜை, வித்யேஸ்வர கலச பூஜை, ஸ்திராஸ்தன தத்துவ ஹோமம் ஆகியவை நடக்கின்றன. மகா கும்பாபிஷேக திருநாளான 27ம் தேதி ஸ்ரீ சீதாராம சுவாமி கோவிலில் காலை 6.30 மணிக்கு புண்ணியாஹ வாசனம், நித்திய பூஜை, பூரணஹூதி, சமரோபானம், யாத்ரா தானம், க்ஷேத்ர பிரதிக்ஷணம் ஆகிய நிகழ்ச்சிகளை தொடர்ந்து 9.30 மணிக்கு ஸ்ரீ லக்ஷ்மணர்-ஆஞ்சநேயர்-சாஸ்தா மற்றும் நவகிரக தேவர்களுக்கு கும்பாபிஷேகவும், விமான கலச அபிஷேகம் நடைபெறும். இதையடுத்து 10 மணி அளவில் ஸ்ரீ சீதாராம உற்சவ தேவி-தேவர்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடக்க உள்ளன. தொடர்ந்து மாலை ஏழு மணிக்கு உற்சவ மூர்த்திகள் கிராம வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் வைபவம் நடக்கின்றன. முன்னதாக ஆந்திர மாநிலம் நன்னியால் மாவட்டம் அல்லகட்டாவில் இருந்து தயார் செய்து எடுத்து வரும் அனுமன் சிலை இன்று (11ம் தேதி) திருச்சூர் மாவட்டத்திற்குள் நுழையும். காலை 7 மணிக்கு மண்ணுத்தி ஒல்லூக்கரை ஒல்லூதிருக்காவு செறுகுளங்கரை கோவிலில் எட்டும் சிலையை கோவில் நிர்வாகிகள் பெற்றுக்கொண்டு பல்வேறு வாகனங்களின் அணிவகுப்புடன் பூங்குன்னத்திற்கு எடுத்து வரப்பட்டு, அங்கிருந்து பஞ்சவாத்தியம் முழங்க பக்தர்கள் புஷ்பாச்சைனையுடன் கோவிலுக்கு வரவேற்கும் நிகழ்ச்சி நடக்க உள்ளது.