சபரிமலையில் சித்திரை விஷூ விழா தொடக்கம் * 15–ம் தேதி விஷூ கனி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஏப் 2023 08:04
சபரிமலை, சபரிமலையில் சித்திரை விஷூ திருவிழா தொடங்கியது. 15–ம் தேதி விஷூ கனி தரிசனமும், கைநீட்டம் வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. சபரிமலையில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான சி்த்திரை விஷூ விழாவுக்காக நேற்று முன்தினம் மாலை நடை திறந்தது. அன்று வேறு பூஜைகள் எதுவும் இல்லை. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. நேற்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்த பின்னர் விஷூ கால பூஜைகள் தொடங்கியது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு அபிேஷகம் நடத்தி நெய்யபிேஷகத்தை நடத்தி வைத்தார். வரும் 19–ம் தேதி வரை வழக்கமான பூஜைகளுடன் கலசாபிேஷகம், உதயாஸ்தமனபூஜை, களபாபிேஷகம், படிபூஜை போன்ற சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. 15–ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் விஷூ கனி தரிசனம் நடைபெறும். மூலஸ்தானத்தில் ஐயப்பன் விக்ரகம் முன்பு காய், கனிகள் அடுக்கி வைக்கப்பட்டு தரிசனம் நடைபெறும். தொடர்ந்து தந்திரி மகேஷ் மோகனரரு, மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி ஆகியோர் பக்தர்களுக்கு நாணயங்களை கை நீட்டம் வழங்குவார். 19–ம் தேதி இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.