ஸ்ரீரங்கம் சித்திரைத் தேர் திருவிழா : சிம்ம வாகனத்தில் நம்பெருமாள் உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஏப் 2023 03:04
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரைத் தேர் திருவிழாவின் மூன்றாம் திருநாளான இன்று காலை உற்சவர் நம்பெருமாள் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் ஆழ்வான் திருச்சுற்று வழியாக சௌகார் ஆஸ்தான மண்டபம் சென்றடைந்தார். இதன் தொடர்ச்சியாக இன்று மாலை 6.30 மணிக்கு உற்சவர் நம்பெருமாள் யாளி வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து கண்ணாடி அறை சென்றடைகிறார்.