திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு முககவசம் அவசியம்: கோயில் நிர்வாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஏப் 2023 05:04
காரைக்கால்: காரைக்கால் ஸ்ரீ சனிஸ்வரபகவான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் முககவசம் அணிய வேண்டும் என்று கோயில் நிர்வாகம் அறிவுறுத்தல்.,
காரைக்கால் மாவட்ட திருநள்ளாறு உலக புகழ்பெற்ற ஸ்ரீ தர்பாரண்யோஸ்வரர் கோவிலில் தனிச்சன்னதியில் ஸ்ரீசனீஸ்வரபகவான் அருள்பலித்து வருகிறார். அனுக்கிரகமூர்த்தியாக பகவான் பக்தர்களுக்கு தரிசனம் மேற்கொண்டு வருகிறார். இதனால் நாட்டில் பல்வேறு பகுதியிருந்து பக்தர்கள் வருகின்றனர் ஆனால் காரைக்காலில் கடந்த சில நாட்காளாக கொரோனா நோய் தொற்று அதிகம் காணப்பட்டு வருகிறது. இதனால் மாவட்டத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டு 118பேர் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.இருவர் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிழந்துள்ளனர்.இதனால் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலில் பேரில் சனிஸ்வபகவான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முககவசம் அணிய வேண்டும் என்று கோயில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நாளை (14ம்) தேதி தமிழ் புத்தாண்டு உள்ளிட்ட தொடர் விடுமுறையால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் பாதுகாப்பு கருதி முக கவசம் அணிய வேண்டும் என கோவில் நிர்வாகம் சார்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அறிவிப்பு பதகைகள் வைக்கப்பட்டுள்ளது.