வத்தலக்குண்டு: விராலிப்பட்டியில் காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா நடந்தது. செவ்வாய் அன்று கரகம் அலங்கரிக்கப்பட்டு அம்மன் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டார். இன்று அம்மன் முளைப்பாரி, கரகத்துடன் ஊர்வலமாக வந்து மஞ்சள் நீராட்டுடன் பூஞ்சோலை சென்றடைந்தார். மஞ்சள் நீராட்டில் பங்கேற்ற கிராமத்தினர் ஆடி மகிழ்ந்து ஒருவருக்கொருவர் மஞ்சளை முகங்களில் பூசிக்கொண்டு பங்கேற்றனர். மஞ்சள் நீராட்டு ஊர்வலம் முடிந்ததும் முளைப்பாரிகள் தெப்பத்தில் கரைக்கப்பட்டன.